தென்கொரியாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Tuesday, October 4th, 2016
இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் ருவான் விஜேவர்தன தெரிவிக்கையில், தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இலங்கை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்க எதிர்பார்த்துள்ள அதேவேளை இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts:
அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் - பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு...
உரிமையின்றி பயன்படுத்திவந்த அரச காணிகளுக்கான உரிமங்கள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு!
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பம் - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|
|


