இலங்கையில் 4 பேருக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி – பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்து!

Friday, December 17th, 2021

கொரோனா வைரஸின் பூஸ்டர் டோஸைப் பெறுவதில் மக்கள் தயக்கம் காட்டுவதை சுகாதார அமைச்சு அவதானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் தொடர்ந்து அவ்வாறு செய்தால் அது மிகவும் ஆபத்தானதாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஒமிக்ரோன் உலகளவில் மாத்திரமன்றி இலங்கையிலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஒரு தருணத்தில் பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தகுதியுள்ள எந்தவொரு நபரும் பூஸ்டர் தடுப்பூசியை மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் ஏனெனில் அது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இது மக்கள் கொரோனா வைரஸைத் தடுக்கவும் வைரஸுக்கு அடிபணிவதைத் தடுக்கவும் உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, ஒமிக்ரோன் உலகளவில் மாத்திரமன்றி இலங்கையிலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஒரு தருணத்தில் பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இல்லையெனில், நாட்டில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் விடயங்கள் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத...
இன்றுமுதல் அனைவருக்கும் "பூஸ்டர்" தடுப்பூசி கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்...
இலவச பாடநூல் அச்சிடுவதற்கு 16.5 மில்லியன் செலவிட தீர்மானம் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவி...