இளைஞர் படுகொலை – சந்தேகநபர்கள் தலைமறைவு!
Tuesday, October 4th, 2016
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் ஏரி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிராதான சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தை சுற்றியுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
தொழில் நுட்ப கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!
|
|
|


