தொழில் நுட்ப கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!

Sunday, January 28th, 2018

தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் (ICTT NVQ LEVEL 4) சான்றிதழைப் பெறுவதற்கான இலவசப் பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம், மானிப்பாய் பயிற்சி நிலையங்களிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என மேற்படி அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலர் க.கிருஸ்ணபாலன் தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரி க.பொ.த சாதாரண தரத்தில் கணிதம் “சி”, ஆங்கிலம் “சி” உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்திபெற்றிருக்க வேண்டும் அல்லது கணிதம் எஸ், ஆங்கிலம் எஸ், உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தியும் க.பொ.த (உ.த) இல் இரண்டு பாடங்களில் சித்தியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப முடிவுத் திகதியன்று 25 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

தகுதியுடையவர்கள் முழுப்பெயர், முகவரி, பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கல்வித் தகைமைகள், தொலைபேசி இலக்கம், பயில விரும்பும் பயிற்சி நிலையம் என்பவற்றைக் குறிப்பிட்டுச் சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மாவட்ட அலுவலர் NAITA இல 44, சோமசுந்தரம் வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு 10.02.2018 க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. காகித உறையின் இடது பக்க மேல் மூலையில் தகவல் தொடர்பாடல் கற்கை நெறி ICTT க்கான விண்ணப்பம் என தவறாது குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106