குடாநாட்டில் கரையோர சூழல் பாதுகாப்பு தினம்!
Wednesday, September 21st, 2016
யாழ் மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் வடமாகாணத்தின் கடலோர பகுதிகளை சுத்திகரிக்கும் பிரதான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு சபை , கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் குருநகர் தொடர்மாடி குடியிருப்பை அண்மித்த கடற்கரை பகுதியில் இந்தநிகழ்வு இடம்பெற்றது.
கடலோர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ரோஹன பெரேரா மற்றும் அரச அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.


Related posts:
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது - சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற...
நாட்டில் ஆயிரக்கணக்கான அரச நிறுவனங்களின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை - நிதி இர...
600 ரூபாவாக உயருமா ஒரு லீற்றர் டீசலின் விலை?
|
|
|


