பிரதேச மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை – ஈபிடிபி செயலாளர் நாயகம் உறுப்பினர்களுக்கு வலியுறுத்து!
Tuesday, July 14th, 2026
…
வேலணை பிரதேசத்தில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன்சார் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,
கட்சியின் குறித்த பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன்
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (14) குறித்த கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது போது, வேலணை பிரதேசத்தின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் மக்களின் வாழ்வியல் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா –
வேலணையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி அல்லது மக்கள் நலன்சார் செயற்பாடுகளும் தமிழ் மக்களின் தனித்துவமான அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அத்துடன் பிரதேச மக்களின் பிரச்சினைகளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் துரிதமாக இனங்கண்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
குறித்த கலந்துரையாடலின் போது பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன், கட்சியின் யாழ் மாபட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், ஊடக செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா – போல், மற்றும் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106