நாட்டில் டெங்கு, மலேரியா தாக்கம் அதிகரிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை!
Thursday, May 14th, 2026நோயாளிகளின்
நாட்டில் டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகளின் போக்கு அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
டெங்கு மற்றும் மலேரியா ஆகிய இரண்டு தொற்றுநோய்களும் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டிருந்தாலும் கூட நாட்டில் அவ்வப்போது டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டின் 12 மாதங்களில் டெங்கு நோயால் 29 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 14 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதிக காய்ச்சல், உடல் வலி, கண்களுக்குக் கீழ் வலி, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு, 48 மணி நேரத்திற்குள் காய்ச்சல் குறையவில்லை என்றால்,
உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Related posts:
பொலிதீன் பாவனைக்கு எதிரான சட்ட நடவடிக்கை - மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை!
100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவானால் வெள்ள அபாயம் ஏற்படும் - இரணைமடு வடிநில பகுதி ...
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!
|
|
|


