மோசமான காலநிலை – அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தம்!
Friday, November 28th, 2025
……
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல ரயில் பாதைகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
மேலும் வெள்ளம் மற்றும் மரங்கள் விழும் அபாயமும் அதிகரித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் நிலவும் இந்த அபாயகரமான சூழ்நிலைகள் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
000
Related posts:
அம்பாறையில் ஆகக்கூடுதலான வேட்புமனுக்கள் நிராகரிப்பு !
இலங்கையிலும் உக்கிரமடையும் கொரோனா வைரஸ் - நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு!
இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பி...
|
|
|


