இலங்கையிலும் உக்கிரமடையும் கொரோனா வைரஸ் – நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு!
Saturday, March 21st, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 4 கொரோனா நோயார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 76 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் முழுமையான குணமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகளை கண்டறிந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா ...
மாலைத்தீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்!
யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் அதிகரிப்பு - உயிரியல் முறையில் கட்டுப்படுத்...
|
|
|


