பரந்தன் பகுதியில் 400 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றிய பொலீசார்!
Monday, February 24th, 2025
வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலீஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (24) வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குகிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150 இற்கு மேற்பட்ட கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
350 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய கஞ்சா, வாகனம் மற்றும் சந்தேக நபர் ஆகியோர் கிளிநொச்சி பொலீஸாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் மீன்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை - நுகர்வோர் கவ...
காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரே புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்ப...
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி - ஜனாதிபதி ரணில் பக...
|
|
|


