நாட்டில் இன்றுமுதல்  மின்வெட்டு இருக்காதாம் – கூறுகின்றது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!

Friday, February 14th, 2025

நாடாளவிய ரீதியில் இன்றுமுதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை, தலா 4 மணி நேரம் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 20 மண்டலங்களாக இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதால், நுரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்களும் செயலிழந்தன.

இந்நிலையில் அவை விரைவாக சீர்செய்யப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மின்விநியோகம் வழமைக்கு திரும்புவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

000

Related posts:


இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு சர்வதே...
கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளின் கூரைகளுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு - மின் மற்றும் ...
தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கம் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவி...