யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய விவகாரம் – மேலும் ஒருவர் கைது!
Tuesday, February 11th, 2025
அண்மையில், யாழ். கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் அத்துமீறி உள் நுழைந்த குழு, இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்குதல் நடாத்தியது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தேடிவந்த நிலையில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் மேலும் ஒரு சந்தேகநபரை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்த நிலையில், நேற்று திங்கட்கிழமை அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
முழங்காவிலில் கடை தீக்கிரை - 2 கோடி வரை நஷ்டம்!
தபால்மூல வாக்களிக்கும் திகதிகள் அறிவிப்பு!
நல்லிணக்க முயற்சிகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இராஜதந்திரப் பிரிவினருக்கு விளக்க...
|
|
|


