நல்லிணக்க முயற்சிகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இராஜதந்திரப் பிரிவினருக்கு விளக்கம்!
Thursday, August 17th, 2023
அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளிநாட்டு இராஜதந்திரப் பிரிவினருக்கு விளக்கமளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் வெளிவிவகார அமைச்சில் நேற்று இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது நாட்டின் தற்போதைய வளர்ச்சிகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நல்லிணக்கத்தை கையாளும் உள்நாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன், அவர்கள் தமது பணிகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அனைவரும் சித்தியடைவர் - கல்வி அமைச்சர்
நடத்துனர்களின்றி பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க யோசனை முன்வைப்பு - தனியார் பேருந்து உரிமையாளர்கள்...
பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் - சர்வதேச ஊடகங்கள் தகவல்!
|
|
|


