பார்வைக்குறைபாடு – வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு!
Tuesday, February 4th, 2025
யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த ராஜசுந்தரம் கமலாதேவி (வயது 80) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related posts:
முல்லைத்தீவில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதி!
தடம் புரள்கின்றது கூட்டமைப்பு - வடக்குமாகாண சபை உறுப்பினர் தியாகராசா!
பெரும்போகம் - மன்னார் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை – மன்னார் மாவ...
|
|
|


