இன்று நாடளாவிய ரீதியில் பொலிஸாருக்கு விசேட சத்தியப்பிரமாணம்!

Saturday, September 17th, 2016

நாடளாவிய ரீதியில் பொலிஸார் இன்று (17) விசேட சத்தியப்பிரமாணம் ஒன்றை செய்து கொள்ளவுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால், பொலிஸாருக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒழுக்க விதிக் கோவையை பின்பற்றி நடப்பதாக சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளது. இந்த ஒழுக்க விதிக் கோவை இன்று (17) காலை 9 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.

இதன்பிரகாரம் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் முன்னிலையில் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.

www.elakolla.com__2015071516404070686

Related posts:


தமிழ் மக்களைக் கைவிட்டு கொழும்பைப் பாதுகாப்பதில் மல்லுக்கட்டி நிற்கும் கூட்டமைப்பு! - ஐயாத்துரை ஸ்ரீ...
யாழ்ப்பாணத்தில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது சுகாதார நடைமுறைகள் - வடக்கு மாகாண சுகாதார சேவை...
பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு - 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெ...