பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு – 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டு என கல்வியமைச்சு விசேட அறிவிப்பு!
Saturday, April 2nd, 2022
2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுதராதர சாதாரணத்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீண்ட மின் தடையால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமையால், ஏப்ரல் 4 ஆம் திகதிமுதல், முன்கூட்டிய விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அஞ்சல் அலுவலகத்தில் 5 இலட்சம் பதிவுத்தபால்கள் தேங்கியுள்ளன - கிடப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரி...
வாகனங்களின் விலை குறைந்துள்ளது - இறக்குமதியாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!
கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
|
|
|
பெரும்போக நெற் செய்கைக்கு 3 மாதங்களில் 3 ஆயிரத்து 559 பவுசர் எரிபொருள் பகிர்ந்தளிப்பு - விவசாய அமைச்...
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால ...
ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை - அந்தந்தக் காலச...


