பொதுத் தேர்தலில் புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துங்கள்- தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, November 13th, 2024
நாளையதினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன. இதனால் பலரும் குழப்பத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
எவ்வாறாயினும், நாளையதினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போதும், விருப்பு வாக்குகளை வழங்கும்போதும் புள்ளடியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.
எனவே உரிய முறையை பின்பற்றி அளிக்கும் வாக்கினை செல்லுபடியாகும் வாக்காக வாக்காளர்கள் மாற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
காலநிலை சீர்கேடு: டெங்கு நோய் பரவல் அபாயம்..!
பஞ்சம் இரட்டிப்பாகும் : மிகுந்த ஆபத்தில் 10 நாடுகள் - எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக ...
தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குள் நுழையத் தடை - வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|
|


