கிளிநொச்சியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!
Friday, September 16th, 2016
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது நேற்று பிற்பகல் ஆறு முப்பது மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ரக செல்கள் மீட்கப்பட்டுள்ளது
இருப்பினும் இன்றையதினம் காலையே குறித்த காணியினுள் வேலைசெய்கின்ற ஒப்பந்தகாரரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் அத்துடன் மீட்கப்பட்ட ஒன்பது ஆர்பிஜி ரக செல்களும் பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Related posts:
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த மூவர் விளக்கமறியலில்!
மோசடிகள் தொடர்பான 171 முறைப்பாட்டு விசாரணைகள் பூர்த்தி!
நாட்டில் உருவாகும் மற்றொரு ஆபத்து - மக்களை எச்சரிக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!
|
|
|


