மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Tuesday, November 29th, 2022
மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அமைக்க முன்மொழிந்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “முன்னாள் ஜனாதிபதி, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை நான் செவிமெடுத்தேன். அதனைச் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இது நல்லதென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள நாம் இதற்கு முழுமையாக ஆதரவளிப்போம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சீன பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை பாதுகாப்பு செயலாளர்கள்!
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் - இருவர் மீது வாள்வெட்டு - சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கை...
|
|
|


