அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
Monday, October 7th, 2024
பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு விடுத்துள்ளார்.
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரியாலை இளைஞர் கொலை - CCTV புகைப்படங்கள் வெளியீடு!
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத 1 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு; 45 ஆயிரம் பேர் அரச சேவையில் இ...
|
|
|


