அத்தியாவசிய பொருட்களின் சிலவற்றின் விலைகள் குறைப்பு!
Friday, March 12th, 2021
சதோச விற்பனை நிலையங்கள் பெரிய வெங்காயம், சிவப்பு பச்சையரிசி மற்றும் உள்நாட்டு கிழங்கு உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் சந்தையில் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 195 ரூபாவுக்கும், உள்நாட்டு கிழங்கு 150 ரூபாவுக்கும், சிவப்பு பச்சை அரிசி 89 ரூபாவுக்கும் சதோச விற்பனை நிலையங்களில் விற்ப்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விலைக்குறைப்பு நடவடிக்கையானது இன்றுமுதல் அமுலுக்கு வரும்வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.
இதனிடையே கடந்த பெப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட 27 பொருட்களுக்கான விலைக்குறைப்பானது அதேநிலையில் கொள்ளப்படுமெனவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெதுப்பக கிணற்றுக்குள் இறந்த நிலையில் நாய்: வெதுப்பகம் மூடப்பட்டது – நெல்லியடியில் சம்பவம்!
மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
கொலைகளையும் சட்டவிரோத மதுபான உற்பத்தியையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுழிபுரத்...
|
|
|


