கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
Monday, November 1st, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 41 ஆயிரத்து 73ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 5 இலட்சத்து 12 ஆயிரத்து 798 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 14 ஆயிரத்து 532 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஆண்கள் 10 பேரும் பெண்கள் 8 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 743ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எரிபொருள்களின் விலை குறைப்பு - பேருந்து, ஓட்டோ என்பனவற்றின் கட்டணம் 4 வீதத்தால் குறைப்பு!
தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் - இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து...
|
|
|


