130,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Sunday, August 11th, 2024
130,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
00
Related posts:
இன்றைய கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை!
சீரற்ற காலநிலை 10 ஆம் திகதி வரையில் நீடிக்கும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆணையாளர் தெர...
18 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா யூரியாவுடன் கொழும்பை வந்தடைந்தது கப்பல்!
|
|
|


