ஆசிரியரிடம் தாலிக்கொடி கொள்ளை!

Wednesday, November 23rd, 2016

பாடசாலையில் இருந்து வீடு திரம்பிக்கொண்டிருந்த ஆசிரியரின் 5 1/2பவுண் தாலிக்கொடி கொள்ளையர்களால் அறுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்ளை புன்னாலைக்கட்டுவனை அண்மித்த இடத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

பாடசாலையில் இருந்த தனது பிள்ளையுடன் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ஆசிரியரை முந்திக்கொண்டு சிறிது தூரம் சென்ற பின்னர் திரும்பி வரும்போது தாலிக்கொடியை இழுத்த அறுத்துக்கொண்டு சென்றனர் என்ற முறையிடப்பட்டுள்ளது. வீதியில் யாராவது வருகிறாhர்களா என்று பார்க்க அவர்கள் முந்திக்கொண்டு சென்றிருக்கலாம். எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு கொள்ளையிட்டிருக்கலாம். கொள்ளையர்களுடன் இழுபறிபட்டு  தாலிக்கொடியை பாதுகாக்க முற்பட்டபோதும் கொள்ளையர் அறுத்துச் சென்றுவிட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள் இலக்கம் முறைப்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TamilDailyNews_2492748498917



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106