கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்தநிலையில் மீட்பு!
Sunday, June 23rd, 2024
யாழ்ப்பாணம் – கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தநிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல - ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர்...
அம்பாறை தமிழர்களுக்கு இறைவனினால் அனுப்பப்பட்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - திருக்கோயில் பிரதேச வர்த்த...
மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஆராய்வு!
|
|
|


