மன்னாரில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆரம்பிக்க தீர்மானம்!
Wednesday, April 3rd, 2019
மன்னார் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
இது வரையில் 2 எரிவாயு படிகங்கள் மற்றும் கனிய வள படிகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு படிகத்தின் மூலம் பெறப்படும் எரிவாயுவின் மூலம் சுமார் 300 மெகாவோல்ட் வலுவை கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை 2000 வருட காலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இவற்றின் மூலம் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பயன்கிட்டும் என்றும் இதில் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதில் அரசாங்கத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான தொடர்பு முன்னெடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் காலமானார்!
அனைத்து விமான நிலையங்களும் மீளத் திறக்கப்பட்டன - கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்த...
ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது - பிரதமர் ரணில் விக்கிரமசிங்...
|
|
|


