இலங்கை – அவுஸ்திரேலியா இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
Sunday, March 17th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.
கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர்.
அவர்கள் இலங்கையில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமைத் சேவைகள், கடல்வள பாதுகாப்பு, அமைதி காக்கும் வேலைத் திட்டங்கள் பலவற்றில் ஈடுபடவுள்ளனர்.
Related posts:
இதுவரை 2 ஆயிரம் அழைப்புகள்!
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இழப்பீடு
உடுப்பிட்டியில் புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!
|
|
|
திருமண நிகழ்வுகள் இன்றுமுதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் - இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ...
கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் பலி – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கும் தொற்றுற...
10 பேருக்கு 400 ஏக்கர் காணியை கொடுக்க நினைக்கின்றனர் சிலர் - கமநல சேவை நிலையத்தையும் ஆய்வு செய்ய வேண...


