அம்பாறை தமிழர்களுக்கு இறைவனினால் அனுப்பப்பட்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – திருக்கோயில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் புகழாரம்!
Monday, July 27th, 2020
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு தலைமை அளிப்பதற்காக இறைவனினால் அனுப்பப்பட்டருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்று திருக்கோயில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் வி.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணைக்கு வாக்களித்து அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்துமாறு தெரிவித்ததுடன், கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. கட்சியினால் அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
அம்பாறை, திருக்கோயில் பிரதேசத்தி்ல், ஈழ மககள் ஜனநாயகக் கட்சி சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வெளிப்படுத்தும் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு திருக்கோயில் பிரதேச மக்கள் சார்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்
Related posts:
தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வு - தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை!
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் - பிரதமர் மகிந்த ராஜபக்ச தெர...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 55 ஆயிரத்து 780 பேர் பாதிப்ப என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவி...
|
|
|


