பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் – பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – நேரில் சென்று பணிப்புரை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 3rd, 2024

முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை அமைத்துள்ள விடயம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரையை வழங்கியுள்ளார்.

முன்பதாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு இன்று 903.04.2024) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தது கொண்டார்.

குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப் பகுதியானது சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த குதியை பார்வையிட அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை பொது மக்களுக்கு அசோகரியம் ஏற்படாத வகையில் நடவடைக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்ற...
வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில் விஸ்தரிப்பு - ஈ.பி.டிபி.யின் துார நோக்கான ...
சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் - பூநகரிப் பிரதேச மக்களுடனா...

அரசியலில் பெண்களின் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்படும்போது தான் சமூக மாற்றத்தை கொண்டு வரமுடியும் - ட...
மண்கும்பானில் பாரிய படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினால் அங்குரார்ப்பணம்!
அரசியல் வேறுபாடுகளின்றி நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும் - தமிழ் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அ...