தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம்!
Sunday, March 24th, 2024
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்பதாக பிரியசாத் டெப் தலைமையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகளை ஆய்வு செய்து, காலத்தின் தேவைக்கேற்ப தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது!
விரைவில் அரச வைத்தியசாலைகளில் விசேட ஆலாசனைச் சேவை - அமைச்சர் ராஜித!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியா செல்கிறார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்!!
|
|
|
கால்நடைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகுந்த நீர்வு எட்டப்படும் - வேலணை பிரதேச சபை தவிசாளர் கருண...
ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி த...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை - உள்ளூராட்சி மன்றங்கள் மற்று...


