ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியா செல்கிறார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்!!

Wednesday, June 14th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விஜயத்தின்போது இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பாரத பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் – 200 தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மலையகம் – 200 நிகழ்வுக்கு இந்திய பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்படும் என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106