கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் – கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவிப்பு!
Saturday, March 9th, 2024
கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால், சில விசேட கணக்காய்வு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அரச சேவையில் தற்போதுள்ள பட்டதாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்பட்டு 465 வெற்றிடங்களுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை திரட்டும் தேர்தல் ஆணையகம்!
இ.போ.ச. பேருந்து சேவை சீரின்மை - மன்னார் சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு - பொதுமக்கள் கடும் விசனம்!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வி - அரசாங்கத்துக்கு 78 மில்லியன...
|
|
|


