மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் எதிர்வரும் 29 முதல் மீள திறக்க அனுமதி!

Wednesday, March 24th, 2021

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமாக மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளின் 5, 11 மற்றும் 13 தரங்களின் கல்வி நடவடிக்கை  கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின.

எனினும், மேல் மாகாணத்தின் ஏனைய தரங்களை எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம்திகதி ஆரம்பிப்பதென முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை – மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
இலங்கை ரூபா தொடர்ந்தும் வலுவான நிலையில் – இவ்வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான பெறுமதியில் ஐந்தில் ஒ...
நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டு -  நாளைமுதல் நடைமுறைக்கு வரும் என   குடிவரவு மற்றும் குடியகல்வு த...