வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை – மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Monday, August 23rd, 2021
வெதுப்பக உற்பத்திகள் எவ்வித விலை உயர்வும் இன்றி வழமையான விலையில் விற்பனை செய்யப்படும் என மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாகாண வெதுப்பக உரிமையளார்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் காமினி கந்தேகெதர, நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு இறாத்தல் பாணின் விலை இன்றுமுதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை 10 ரூபாவாலும், ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சார துறையின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு புத்திஜீவிகள் குழு - அமைச்சர் மஹிந்த அமரவீர!
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்!
ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளர் காலமானார்!
|
|
|


