வடக்கின் பெரும் போர் களமுனைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் – வீரர்களை வாழ்த்தி இரண்டாம் நாள் ஆட்டத்தையும் ஆரம்பித்துவைப்பு!
Friday, March 8th, 2024
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்தியகல்லூரி மற்றும் யாழ்.புனித பரியோவான் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றுவரும் துடுப்பாட்ட போட்டியின் ஆட்டத்தை பாவையிட விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கபற்றும் இரு பாடசாலைகளின் மாணவர்களையும் ஊக்குவித்து வாழ்த்தியதுடன் இன்றைய இரண்டாம் நாள் போட்டிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
முன்பதாக வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்.புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள்களைகொண்ட 117 ஆவது கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை பாவையிட மைதானத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
அரசாங்கத்தின் பாகுபாடற்ற அபிவிருத்திகளின் அ;டயாளங்களில் ஒன்றுதான் அக்கராயன் ஆற்றுப் பிரதேசத்தின் அபி...
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளை பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைத்தார் அமை...
|
|
|








