ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Sunday, September 11th, 2016
ஐக்கியதேசியக் கட்சியின் 70ஆவது மாநாடு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்விக்கிரம சிங்க தலைமையில் நேற்று பொரளை கெம்பல் மைதானத்தில் (10) இடம்பெற்றது.
நேற்றுக்காலை நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றியதுடன் ஆசிச்செய்தியையும் வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அரசியல் பிரமகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
குப்பைகள் தொடர்பில்கூட கொள்கைத் திட்டம்இல்லாதமையே அனர்த்தத்திற்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
வேலணை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறக்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!
யாழ்.பல்கலை மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஈ. பி. டி. பி ஆதரவு!
|
|
|


