பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 36 பேர் காயம்!
Thursday, February 29th, 2024
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று (29) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார நிலைமைகள் தொடர்பான விசேட மாநாடு!
இழப்புகள் அர்த்தமுள்ள வகையில் அரசியலாக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத...
இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


