இலங்கை போக்குவரத்து துறையில் இலத்திரனியல் கட்டணம் செலுத்தும் அட்டையை அறிமுகம்

Saturday, March 12th, 2016

இலங்கை பேருந்து போக்குவரத்து துறையில் இலத்திரனியல் கட்டண செலுத்துகை அட்டையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

பயணிகள் இலகுவான முறையில் தமது கட்டணத்தை செலுத்தக் கூடிய வகையில் இந்த அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன் உலகிலுள்ள பல நாடுகள் இந்த முறையை போக்குவரத்து துறையில் பயன்படுத்தி  வரும் நிலையில், இலங்கையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பயணிகள் தகவல்களை பெற்று கொள்ளவும், கட்டணங்களை பயணிகளிடம் இருந்து இலகுவாக அறவிடவும் இந்த சேவை பயனுள்ளதாக உள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் போக்குவரத்து ஆணைக்குழு தனியார் பஸ் உரிமையாளர்கள் அரச வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப கம்பனிகள் ஆகியவற்றின் துணையுடன் இலத்திரனியல் கட்டண செலுத்துகை அட்டையை அறிமுகம் செய்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106