இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Tuesday, August 24th, 2021
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புக்களில் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை - மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் ...
இந்த வருடத்தில் 4 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை - சுற்றுலா அபிவிருத்தி ...
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தகவ...
|
|
|


