குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது – குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவிப்பு!.
Sunday, February 11th, 2024
குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குத்தகை நிறுவனங்களால் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச்செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பான சுற்றறிக்கையில் கடந்த 08 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபர் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டுக் கிராமிய சமுர்த்தி வங்கிகளில் இலகு கடன் திட்டங்களும் கொடுப்பனவ...
ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் விரைவில் அறிமுகம்
கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கைக்கு 11 பதக்கங்கள்!
|
|
|


