ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் விரைவில் அறிமுகம்
Saturday, July 8th, 2017
ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செய்தி மூலங்களை அறிவிக்க வேண்டும் என்ற வகையில் சட்டமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். தகவல்களை மூடி மறைத்து அரசாங்கத்தின் நன்மதிப்பினை தக்க வைத்துக் கொள்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டமை ஜனநாயக விரோத செயற்பாடு எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
Related posts:
வலி. வடக்கு மக்களுக்கான விசேட அறிவித்தல் - மாவட்டச் செயலர்!
சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கையை நிராகரித்தது நுகர்வோர் விவகார அதிகார சபை !
"அஸ்வெசும" சமூக நலன்புரித் திட்டம் சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ சமுர்த்தி வங்கிகளையோ பாதிக்...
|
|
|


