பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024

2 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு தங்களது பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயப் பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்  போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சட்டரீதியாக 5 ஏக்கருக்கு மேலதிகமான விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு மாத்திரமே துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன விலங்குகளால் பயிர்களில் ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதால் பயிர் செய்கைகளை கைவிடும் நிலையில் உள்ளதாக அமைச்சரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


தனியார் வகுப்புக்கு வருமாறு மாணவர்களை அச்சுறுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை!
இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சுவார்த்தை!
பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின் திங்கள்முதல் மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்ன...