நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிப்பு!
Saturday, January 20th, 2024
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை டெங்கு நோயின் தாக்கம் காரணமாக யாழில் நேற்றையதினம் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலையில், இந்த ஆண்டின் முதல் 19 நாட்களில் நாடு முழுவதிலும் மொத்தமாக 6998 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1440 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு துரித வேலைத்திட்டம் - வி.சிவஞானசோதி!
அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களுக்கு திங்கள்முதல் வீட்டு தனிமைப்படுத்தல் முறைமையில் சிகிச்சை -...
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்...
|
|
|


