ஊவா, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் சாத்தியம்!
Saturday, July 17th, 2021
ஊவா, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது!
பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றுமாறு கல்வியமைச்சிடம் கோரிக்கை!
சாதாரண மக்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவானால் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் - த...
|
|
|


