அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே பொதுஜன பெரமுனவின் கடமை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
Thursday, December 21st, 2023
அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை என அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிகரமாக சட்டத்தை மீட்டெடுத்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் ஒவ்வொரு பொதுமக்களும் தாங்கள் வாக்களிக்கும் அரசியல் கட்சியின் வரிக் கொள்கை மற்றும் கடந்த கால பொருளாதார நடைமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
தேர்தல்கள் நெருங்க நெருங்க, மக்களை ஏமாற்றும் வகையில் கண்மூடித்தனமாக பல்வேறு திசைகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
000
Related posts:
யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பரில் நடத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேம...
மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்...
|
|
|


