பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்பு – பொதுமக்கள் தினம் இன்றுமுதல் மீண்டும் நடைமுறைக்கு!
Friday, December 15th, 2023
பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்றுமுதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், இந்த தினம் அமுல்படுத்தப்படும் என்பதுடன், காலை 9 மணி முதல் பொதுமக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசாரணை பிரிவுகளில், ஏற்படும் தேவையற்ற அசௌகரியங்கள், கால தாமதம் உள்ளிட்ட முறைப்பாடுகளை, இந்த பொதுமக்கள் தினத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முன்வைக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அது தொடர்பில், உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அறிவித்துள்மை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
துறைசார்ந்த தெரிவுகளை மேற்கொள்ளாமையே மாணவர்கள் கல்வியில் பின்னடைவை எதிர்நோக்கு காரணம்: வடமாகாண ஆளுந...
புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு : யாழ் மாணவர்கள் இருவர் முதலிடம்!
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மான...
|
|
|


