மருந்துகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Sunday, July 16th, 2023

மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் ஐந்து விசேட வைத்தியர்கள் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புதிய குழு எந்தவொரு மருந்து அல்லது சுகாதாரத் துறை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைக்கான பரிந்துரைகளை வழங்கும் என கூறினார். இதேவேளை, மருந்துகளின் தரம் மற்றும் சுகாதாரத் துறையின் நிலைமை தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


உறுப்பினர்களுக்கான கடிதம் அவசரமாக அனுப்பிவைப்பு  - உள்ளுராட்சித் திணைக்களம் துரித நடவடிக்கை!
இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு - இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை பலப்படுத்து...
சஜித்தின் கட்டுப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை - 02 மர்ம நபர்களின் கீழேயே இருக்கிறது - உள்ளதாக ...