நிலவும் மழையுடனான காலநிலை – டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
Thursday, December 14th, 2023
நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
காலி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த ஆண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வீதிப் பாதுகாப்பிற்காக புதிய திட்டம்!
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவம் - இராணுவத் தளபதி அறிவிப்ப...
நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்!
|
|
|


