எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவம் – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Monday, May 2nd, 2022
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைய இராணுவம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
தேர்தலைத் தள்ளிப்போடும் முயற்சிப்பதாக 5 கண்காணிப்பு அமைப்புக்கள் எதிர்ப்பு!
பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்துகொள்வது உறுதியாகவில்லை - இலங்கை இந்தியாவின் வருகின்றது உயர்...
புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் !
|
|
|


