அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Wednesday, November 15th, 2023
வேலையின்மைக்கான கொடுப்பனவுகளான அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக வணிக நிர்வாக முதுகலைப் பட்டதாரி மாணவர் சங்கம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான அறிவார்ந்த விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய சமூகத்தை கட்டியெழுப்பும் ஒரு அங்கமாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சுற்றுலாப் பயணிகள் மூலம் 43 மில்லியன் வருமானம்!
இடியுடன் கூடிய மழைக்கு காரணம் - வானிலை அவதான நிலையம்!
மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் !
|
|
|


